கிரிந்திவெல வல்கம்முல்ல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (21) மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிந்திவெல, திம்பிரிகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே உயிரிழந்தவர் ஆவார்.
இந்த நபர் குத்தகை அடிப்படையில் காணி ஒன்றை கொள்வனவு செய்திருந்தார். அந்த காணியில் வசித்த காவலாளி ஒருவரே இந்த கொ லையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொ லைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கொ லையை செய்துவிட்டு உயிரிழந்தவரின் உந்துருளியுடன் தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.