தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவுப் பகுதிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று காலை காலி நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுதுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் காலி கோட்டை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், விபத்தில் காயமடைந்தவர்கள் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்றுமொரு பயணியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (2ஆம் இணைப்பு)