கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் செட்டிபாளையத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்பகுதியில் அம்புலன்ஸ் ஒன்று மோதியதில், அம்புலன்ஸில் இருந்த மூவர் இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செட்டிபாளையத்தில் அம்பியூலன்ஸ் வண்டி இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளளது. களுவாஞ்சிகுடியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று கல்முனை நோக்கி செல்வதற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது பின் புறமாக மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அம்பியூலன்ஸ் வண்டி சாரதியும் அதில் பயணித்த பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருமாக மூவருமாக காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்துக்குச் சொந்தமான இந்த அம்பியூலன்ஸ் களுவாஞ்சிகுடி பகுதிக்கு கடமை நிமித்தம் சென்றபோதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக பேருந்தில் பயணித்தவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.