பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை தமிழ் தேசிய பாடசாலைக்கு அருகாமையில் பசறையிலிருந்து லுணுகலை பக்கமாக சென்று கொண்டிருந்த PIYAJO ரக முச்சக்கரவண்டி ஒன்று பசறை 13 ம் கட்டை பகுதியில் இருந்து பசறை நகர் நோக்கி வந்து கொண்டிருந்த BAJAJ ரக முச்சக்கரவண்டியில் நேருக்கு நேர் மோதி விதிக்குள்ளானதில் மூவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பசறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிற்காக மடூல்சீமை கொக்காகல பகுதியில் இருந்து PIYAJO ரக முச்சக்கரவண்டியில் பசறை பகுதிக்கு வந்த இளைஞர்கள் நிகழ்வு முடிந்து லுணுகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, லுணுகலையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த BAJAJ ரக முச்சக்கரவண்டியில் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசறை 14 ம் கட்டை பகுதியில் இருந்து வியாபாரத்திற்காக BAJAJ ரக முச்சக்கரவண்டியில் சிற்றுண்டி உணவுகளை தயாரிப்பதற்கான பொருட்களை பசறை நகருக்கு கொண்டு சென்ற முச்சக்கர வண்டியில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
குறித்த பொருட்களை கொண்டு சென்ற BAJAJ ரக முச்சக்கரவண்டியின் சாரதியான 65 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பசறை பக்கமிருந்து லுணுகலை பக்கமாக சென்று கொண்டிருந்த PIYAJO ரக முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்கள் சாரதி உட்பட அனைவரும் மது போதையில் இருந்ததாகவும் விபத்து இடம்பெற்றதன் பின்னர் தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
PIYAJO ரக முச்சக்கரவண்டியில் பயணித்த 31,39 வயதுடைய சாரதி உட்பட மேலும் ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.