கண்டி ஹிரஸ்ஸகல பகுதியில் இன்று(16) காலை இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உந்துருளி ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.