நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த எச்சரிக்கை அறிவிப்பானது முதலாவது கட்டத்தின் கீழ் இன்று மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை, ஹாலிஎல, அப்புத்தளை பிரதேச செயலக பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாததும்பர பிரதேச செயலக பிரிவுகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் ரிதீகம பிரதேச செயலக பிரிவுகளுக்கும்,
மாத்தளை மாவட்டத்தில் அம்பன்கஹ கோறளை, ரத்தொட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.