வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கும் பெரும் பணக்காரர்களின் பாவனைக்காக பாரியளவில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப் பொருட்களை கடத்தியவர் உட்பட இருவர் மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 6 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 40 கிராம் கொக்கெய்ன் மற்றும் 206 கிராம் குஷ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அத்துடன் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பதினெட்டு இலட்சத்து எழுபத்து ஐயாயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது என மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது சிறையில் இருக்கும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரால் இந்த போதைப்பொருள் கடத்தல் நடத்தப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி நாடு முழுவதும் உள்ள பிரபல இரவு விடுதிகளுக்கும், உயர்மட்ட வேலைகளில் பணிபுரியும் பணக்காரர்களுக்கும் போதைப்பொருள்களை மிகவும் ரகசியமாக விநியோகித்து உள்ளார்.
அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்களில் படிக்கும் பெரும் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.