தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அவர்கள் இன்றைய தினம்14.12.2024 கிளிநொச்சி முரசு மூட்டைப் பகுதியில் உள்ள மக்களை சந்தித்தார்.
இதன் போது அவர் தெரிவிக்கையில்,
தற்பொழுது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விதமான விடயங்கள் தொடர்பாகவும் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.
கடந்த வருடம் இரணைமடுக் குளத்தின் கீழ் சிறு செய்கையின் போது முரசு மூட்டை பகுதியில் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் விதைக்கப்படாமல் தரிசு நிலமாகவே காணப்பட்டதாகவும் குளத்தில் போதிய அளவு நீர் இருந்த போதிலும், அதை விடுவிக்காத சில அரச அதிகாரிகளின் அசம்பந்த போக்கு காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பன்னீராயிரம் மெற்றிக்தொன் அரிசியை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி இனிமேல் இப்படியான நடவடிக்கைகள் இடம் பெறாது இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.