யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை ஆச்சிரமத்தில் இடம் பெற்றது.இதில் ஆன்மீக அருளுரையினை,“நாமங்களின் பெருமை“ என்ற ஆன்மீகத் தலைப்பில் ஆசிரியர் உமாராணி பேரானந்தம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.அத்துடன் மணல்தெரு, கம்பர்மலையை சேர்ந்த கம்பர்மலை வித்தியாவயத்தில் கல்வி கற்கும் மாணவி,தையிட்டி வடக்கு, மயிலிட்டியை சேர்ந்த தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி, பலாலி தெற்கு, வசாவிளானை சர்ந்த அச்சுவேலி சரஸ்வதி வித்தியாவயத்தில் கல்வி கற்கும் மாணவி ஆகியோருக்கு துவிச்சக்கர வண்டிகள் ரூபா 145200 பெறுமதியில்ந வழங்கிவைக்கப்பட்டதுடன், பண்டாரவளையை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு வீடு திருத்தச் செலவுக்காக ரூபா 100,000 நிதி அவர்களது வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டதுடன் அதே இடத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு மருத்துவச் செலவுக்காக ரூபா 100,000 நிதியும் அவர்களது வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டது.மேற்படி உதவித் திட்டத்தினை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் வழங்கி வைத்தார்.இன்றைய இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகிகள், தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.