அநுராதபுரம், கெக்கிராவ, மரதன்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் கடந்த 08 ஆம் திகதி மாலை நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவ, ஒழுகறந்த பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இவர் மரதன்கடவல பெரியகுளத்தில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT
சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.