யாழ். இணுவில் கிழக்கு சேர்ந்த செல்வி கஜீனா தர்ஷன் என்ற மாணவி சதுரங்கத்தில் சாதனை படைத்துள்ளார்.
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் இலங்கை சார்பாக செல்வி கஜிஷனா தர்ஷன் என்ற ஏழு வயதான யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை தரம் 02 மாணவி தாய்லாந்து செல்ல உள்ளார்.
கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை படைத்து வருகின்றார்.
வட மாகாணத்தை சேர்ந்த இந்த சிறுமி தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் வட மாகாணத்திற்கு ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தை பெற்று கொடுத்துள்ளார். வட மாகாணத்தால் ஒரே ஒரு தங்க பதக்கம் மாத்திரமே வெல்லபட்டது.
இதன் மூலம் தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய இறுதி போட்டியில் எமது நாட்டின் official player ஆக பங்குபற்றவுள்ளார். மேலும் சேர்ஜியாவில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்க போட்டிகளிலும் மற்றும் Fide cadet போட்டிகளிலும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ வீரராக விளையாடவுள்ளார்.
இன்று வடமாகாணம் மட்டுமன்றி இலங்கையில் மூன்று வகையான சதுரங்கத்தில் ரேட்டிங் கொண்டிருக்கும் ஒரே ஒரு சிறுமி இவர் அத்துடன் Rapit (15+10 sec ) சதுரங்க தரப்படுத்தலில் 1615 புள்ளிகளுடன் உலக அளவில் 4 ம் இடத்தில் உள்ளார்.
இலங்கை ரீதியில் Battle of Mind இல் சாம்பியன் பட்டம், 9 வயதுக்குட்பட்ட பெண்கள் குழுப் போட்டியில் Board champion 2024 இல், வலய, மாவட்ட, மாகாண போட்டிகளில் முதலிடம் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இச் சிறுமி தனது வாய்ப்புக்காக காத்திருக்கின்றாள், தகுதியிருந்தும் பல காரணங்களால் வெற்றி எம்மை விட்டு தள்ளிப் போகின்றது. இச் சிறுமியும் தாய்லாந்து செல்லவும் அதற்குரிய சிறப்பு பயிற்சிகளை பெறவும் தனக்கான SPONSORSHIP னை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
சாதனை வரிசையில் கிரிகெட்டில வியாஸ்காந், பளுதூக்கலில் புஷ்பா, அந்த வரிசையில் இன்று கஜிஷனா எனும் சிறுமி வர ஆர்வமாக இருக்கின்றார்.