இரத்தினபுரி, பலாங்கொடை, கிரிந்திகல பிரதேசத்தில் உள்ள சிறிய கால்வாய் ஒன்றிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.