மன்னார் மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “தென்கிழக்கு லண்டன்/கென்ட், பகுதியில் வசிக்கும். “ஈழத்தமிழர் வர்த்தக சங்கம்” இன்றைய தினம்(6) அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பிரதேச செயலாளர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 200 நபர்களுக்கு நுளம்பு நெற், பாய், பெட்சீட், துவாய் போன்ற பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பொருட்கள் ” உதவும் கரங்கள் ” அமைப்பின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.இவ் உதவித் திட்டத்திற்கு நண்பன் மோகன்(London) இதற்கான இணைப்பாளராக செயற்பட்டார்.