புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஓர் அங்கமான இந்து சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எதிர்கால திட்டங்களினதும்,மதங்களுக்கிடையிலானநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஓர் ஆரம்பமாக அவ் அமைச்சின் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும் சுனில் செனவி அவர்களும் பெருந் தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்பிரதீப் அவர்களும் வெள்ளவத்தை அருள்மிகு ஸ்ரீ மயூராபதி பத்திரகாளியம்மன் தேவஸ்தானத்திற்கு வழிபாட்டுக்காக சென்றிருந்தார்கள்.இதன் போது ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் திரு பி.சுந்தரலிங்கம் உட்பட அங்கத்தினர்களால் விசேட பூஜை வழிபாடுகளை ஏற்பாடு செய்திருந்ததோடு அமைச்சர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் செய்திருந்தார்கள்.இதன்போது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்னன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார் .