பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள டின்சின் நகரில் சட்டவிரோதமாக முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக டின்சின் நகரில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஒருவர் சுமார் 60 அடி ஆழமான குழி தோண்டி மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரி நுவான் தலைமையிலான குழு நேற்று மாலை மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு பின்னர் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் அதிகாரி நுவான் தெரிவித்தார்.