இயக்குனரும் எழுத்தாளருமான ஜெயபாரதி உடல் நலக்குறைவால் இன்று வெள்ளிக்கிழமை(6) காலை காலமானார். குடிசை திரைப்படத்தின் இயக்குனரான இவர் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இவர் இயக்கிய நண்பா நண்பா திரைப்படமானது தேசிய விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.