அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் 7.0 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினால் உயிரிழப்புகள் அல்லது பாரியளவிலான சேதம் ஏற்படாத போதிலும், குடியிருப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் இந்த ஆண்டு தாக்கிய 7.0 ரிக்டர் அளவிலான ஒன்பதாவது நில அதிர்வு இதுவாகுமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.