கம்பஹா – கெந்தலந்த பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) காலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா, கெந்தலந்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த நபர் கோழிப் பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ள நிலையில் பண்ணையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.