பொன்னாலையில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர்கள் அடங்கிய கும்பல் ஒன்று வீட்டிலிருந்தோரை தாக்க முற்பட்டு பின்னர் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்க கணக்கினை வெளிப்படுத்துமாறு பொன்னாலை பகுதியில் வசித்து வரும் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவர் கோரிக்கை விடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர்ச்சியாக கணக்கறிக்கை வெளியிடப்படாத நிலையில் இது தொடர்பில் முகநூலில் குறித்த கணக்கினை பகிரங்கபடுத்துமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து மாலை வேளை குறித்த உப தலைவரின் இல்லத்திற்கு புகுந்த நிலையில் வீட்டிலிருந்தோரை தாக்க முயன்று தகாத வார்த்தைகளால் பேசிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.