சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
குருணாகல் ஹெட்டிபொல பகுதியில், அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாகத் தொடர்ந்தும் 81 நலன்புரி நிலையங்களில் 8,377 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் 470,094 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.