சட்டவிரோத மதுபான கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம மற்றும் ஜா – எல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 28, 39 மற்றும் 55 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பாணந்துறை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 225 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாணந்துறை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் 1912 லீற்றர் 500 மில்லி லீற்றர் மற்றும் 1500 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக ஜா – எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.