மஸ்கெலியா, சோலகந்த தோட்டப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஸ்கெலியா அப்கட் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.