நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 52 வயது உடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.வீரசேகர கூறுகையில்,
சந்தேக நபர் நல்லதண்ணி தோட்டத்தில் உள்ளவர் எனவும் அவருக்கு மேலும் ஒரு வீடு லக்சபான தோட்ட முள்ளு காமம் கீழ் பிரிவில் உள்ளது எனவும் அங்கு சென்று வருகையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாருடன் ஏற்பட்டுள்ள தொடர்பினால் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தாயார் நல்லதண்ணி நகரில் உள்ள விருந்தினர் விடுதியில் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இரண்டு பெண் குழந்தைகள் பாடசாலை செல்பவர்கள் என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்று முன்தினம் (28) அந்த மாணவியின் புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் பின்னர் ஹட்டன் நீதிமன்றத்தில் நேற்று (29) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.