நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி, காலி, களுத்துறை, கேகாலை, பதுளை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அதிகளவான பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாதுரு ஓயா, ஹத்தா ஓயா மற்றும் மகாவலி ஆகிய ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.