மாத்தளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இரண்டு வாரங்களாக வைத்தியர் போலக் கடமையாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சந்தேக நபரின், நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தமையினால் சக வைத்தியர்களினால் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.