பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.
இதன்போது, முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் கூட்டத் தொடரையடுத்து முற்பகல் 11:30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்திற்கான முதலாவது அமர்வை மிக எளிமையான முறையில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.