கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கலவிட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடையவர் ஆவார்.
இந்த தாக்குதல் சம்பவம் கடந்த ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் ஹிக்கடுவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.