இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) நேற்று செவ்வாய்க்கிழமை (19) அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நிதித்துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது.