யாழ்ப்பாணம் நெல்லியடி கரவெட்டி திரு இருதய கல்லூரியின் பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் கதிர்காமத்தம்பி சிறிஸ்குமார் தலமையில் காலை 9:00 மணியளவில் ஆரம்பமானது.
நிகழ்வின் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம் பெற்றதை தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இதில் கல்விச் சாதனையாளர்கள், இணை பாடவிதான செயற்பாடுகளிலும் பல்வேறு சாதனைகளை புரிந்த மாணவர்களுக்கு பதக்கங்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் பிரதம விருந்தினராக zandra mesh industries நிறுவன பணிப்பாளர் தவரட்ணராசா ஜோன் ஜெயந்தன், சிறப்பு விருந்தினராக acuity knowledge partners கொழும்பு நிறுவன தகவல் ஆய்வு அதிகாரி திருமதி புளோறா லக்சினி உட்பட பலர் கலந்துகொண்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி மாணவர்களை கௌரவித்ததுடன் கருத்துரைகளையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.