10வது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
இதன்போது, நாடாளுமன்ற முறை, பேரவையின் பணிகள், குழுக்களின் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்றார். அத்துடன், 10வது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதிவு எதிர்வரும் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. அந்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் குழுக்கள் தயார்படுத்தப்படும் என்றும் குலரத்ன கூறினார்.
இந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்காக நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை 18 முதல் 22 வரை இரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.