நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் மன்னார் மாவட்டத்தில் சுமூகமாக இடம் பெற்று வரும் நிலையில் காலை 7 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 55.5 வீதமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும், மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று வியாழன் (14) மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் மாவட்டத்தின் மொத்த வாக்குகளின் அடிப்படையில் 50 ஆயிரத்து 369 வாக்காளர்கள் இதுவரை வாக்களித்துள்ளனர்.
மொத்த வாக்காளர்களில் 55.5 வீதமாக காணப்படுகிறது. தற்போது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 53 விதமான வாக்குகளும், நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் 54 விதமான வாக்குகளும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 56 வீதமான வாக்குகளும், மடு பிரதேச செயலாளர் பிரிவில் 60 வீதமான வாக்குகளும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 60 வீதமான வாக்குகளும் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் சராசரியாக 55.5 வீத வாக்குகள் பதிவாகி உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.