கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (13) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் படோவிட்ட 3 ஆம் கட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சந்தேகநபர்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை.
கல்கிசை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.