வரி செலுத்தத் தவறும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுவரி திணைக்களத்தினால் மீண்டும் ஒருமுறை இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சகல நிலுவை வரிகளையும் செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலைக் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் இந்த அறிவித்தலை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரி திணைக்களம் எச்சரித்துள்ளது.