குளியாப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி மேலதிக மாவட்ட நீதிபதி தினிந்து சமரசிங்க நேற்று (08) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவருக்கு எதிராக குளியாப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.
இதனையடுத்து, இந்த முறைப்பாடு மேலதிக விசாரணைகளுக்காகப் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. விசாரணைகள் முறையாக நடாத்தப்படவில்லை என குறித்த பெண், குளியாப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் கூறியுள்ளார்.
பின்னர், குளியாப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் குறித்த பெண்ணின் கணவரைப் பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, குளியாப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.