அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாகொடை சந்திக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஆவார்.
அத்துருகிரிய நோக்கிப் பயணித்த வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினையடுத்து, வாகனத்தின் சாரதி பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.