மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 குழந்தைகளின் உடல்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.