ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அலுவலகம் இன்று வவுனியா திருநாவற்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியின் வேட்பாளர்களான க.துளசி மற்றும் க.ஜசோதினி ஆகியோரின் பிரசார நடவடிக்கைகளுக்காக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
ADVERTISEMENT
இதன்போது முன்னாள் போராளிகள், பொதுமக்கள், தமிழ் தேசியப் பற்றாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு வேட்பாளர்களான க. துளசி மற்றும் க. ஜசோதினி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.