முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தையை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது.
லொஹான் ரத்வத்தையின் மனைவிக்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை கண்டி பிரதேசத்தில் வைத்து கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.