வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (03.11.2024) இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுபானசாலையை அண்மித்த பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு குறித்த இளைஞனை பாலம் ஒன்றின் மீது எறிந்துவிட்டு சென்றுள்ளதாக அப்பகுதி பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிஸார் தாக்குதலுக்குள்ளான நபரை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதித்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்குள்ளான இளைஞன் தொடர்பில் நீதிமன்றில் பல்வேறு வழக்குகளும் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் இருப்பதாகவும், முன்பகை காரணமாக முரண்பாடு ஏற்பட்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.