ஹெஸ்புல்லாஹ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது. இந் நிலையில் நேற்றையதினம் (31) லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
ஒரு ஏவுகணை தாக்குதலில் 5 பேரும் மற்றொரு ஏவுகணை தாக்குதலில் 2 பேரும் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
லெபனானில் இருந்து 25க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் எல்லையைத் தாக்கியுள்ளன.
வடக்கு இஸ்ரேலில் உள்ள மெடுலா என்ற இடத்தில் நடாத்தப்பட்ட தாக்குதலில் 4 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.