பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவாலமுல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
ADVERTISEMENT
சந்தேக நபரிடம் இருந்து 17 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், சந்தேக நபர் பயன்படுத்திய கார் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.