அனைத்து ரயில் ஊழியர்களுக்கும் தாம் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் பயண அனுமதி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரயில் ஊழியர்கள் தொடர்ந்து பொதுமக்களால் விமர்சிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய போக்குவரத்து அமைச்சகம், இந்நிலையை மாற்றும் நடவடிக்கையாக புதிய பயண அனுமதிச்சீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில், அனைத்து ரயில் ஊழியர்களையும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த ஊக்குவிப்பதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.