நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில், லக்கம் பகுதியில் இன்று மதியம் அரச பேருந்து, பார ஊர்தி மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அவிஸ்சாவலை பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் லக்கம் வளைவு பகுதியில் சற்று குறைந்த வேகத்தில் மஸ்கெலியா நோக்கி வந்து கொண்டிருந்த போது பேருந்தில் சிறிய ரக பார ஊர்தியானது பின் பகுதியில் மோதி உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஹப்புகஸ்தனை பகுதியில் இருந்து மஸ்கெலியா நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் சென்று விசாரணை நடாத்தி வருகின்றனர்.