பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கை வங்கி வளாகத்தில் போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் ஒருவர் நேற்று புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.