நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பஸ்கொடை, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரெலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளுக்கு 26 ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அப்பிரதேசங்களில் வசிப்பவர்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டுநர்களும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.