இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் நேற்று புதன்கிழமை (23) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 16 இந்திய மீனவர்களும் இரு படகுகளுடன் யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்குட்படுத்தி மேலதிக நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினர் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளனர்.
இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய மீன்வளத் துறையிடம் அனுமதி டோக்கன்களைப் பெற்று, இரண்டு இயந்திரப் படகுகள் மூலம் ராமேஸ்வரம் கடலுக்கு புதன்கிழமை சென்றனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. மீனவர்களை இலங்கையில் இருந்து விடுவிக்க மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் தலையிட வேண்டும் என இந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் வி.பி.சேசுராஜா தெரிவித்துள்ளார்.