கியூபாவில் தற்போது மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒஸ்கார் சூறாவளி கிழக்கு கியூபாவை கடந்த நிலையில், கியூபா முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக சுமார் 10 மில்லியன் மக்கள் மின்சார விநியோகமின்றி சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை வரை அனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவதற்கும், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இரத்து செய்வதற்கும் கியூபா அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், தலைநகர் ஹவானாவில் 90 சதவீதம் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக கியூபா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.