கனடாவின் வோகன் பகுதியில் இளம் யுவதி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 6ம் திகதி அதிகாலை வேளையில் நோர்வுட் மற்றும் ஜீன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
ADVERTISEMENT
அறிமுகம் இல்லாத பெண்ணொருவரை இந்த ஐந்து பேரும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதுடைய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.