இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள சீஆர்பிஎப் என்ற மத்திய ரிசேவ் பொலிஸ் படையின் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டபோதும், தீப்பரவல் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.