சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தானது நேற்று (19) இரவு ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.